உடுலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு- மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பதாகைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தி மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர். உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் சிலை வழியாக ஊர்வலமாக சென்ற பேரணி மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.


திருப்பூர்: உடுமலை உட்கோட்ட காவல்துறை உடுமலை போக்குவரத்து காவல்துறை, எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை ஸ்ரீ‌ ஜிவிஜி மகளிர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை பஸ் நிலையத்தில் துவங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமார் தலைமை வகித்தார். எண்ணம் போல் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் வரவேற்றார். இதில் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.



இதில் அவர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பதாகைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தி ஊர்வலமாகச் சென்றனர். உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் சிலை வழியாக ஊர்வலமாக சென்ற பேரணி மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாதுகாப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாணவிகள் இடையே பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி போக்குவரத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக உடுமலை இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் சரவணகுமார், நூலகர் கணேசன்(ப.நி) ஆகியோர் கலந்து கொண்டனர். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் , உறுப்பினர்கள் சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...