உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் திருப்பூரில் தொடக்கம் - உடுமலையில் ஆட்சியர் ஆய்வு

குடிமங்கலம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் சென்று குழந்தைகளிடம் கலந்துரையாடினார். அதன்பின்னர், பள்ளி மாணவர்களிடையே குறைகளை அவர் கேட்டறிந்தார். இதன் பின் உடுமலை கால்நடை மருத்துவமனைக்கு சென்றவர், அங்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. மாதத்தில் வரும் கடைசி புதன்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்துக்கு சென்று மாவட்ட ஆட்சியர் அங்கேயே தங்கி அங்குள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களிடம் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைகிறதா? என ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

நேரடியாக சென்று அங்கன்வாடி மையம், நியாயவிலை கடை அரசு பள்ளிகள், கால்நடை துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சரியாக இயங்குகிறதா?. அத்துறையில் வரும் நலத்திட்டங்கள் சரியாக மக்களை சென்று அடைகிறதா என்ற ஆய்வினை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது முதல் வட்டமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு வருகை புரிந்தார். வரும் வழியில் பல்வேறு அரசு துறை அலுவலகங்களை ஆய்வு செய்தார்.



குடிமங்கலம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று குழந்தைகளிடம் கலந்துரையாடினார். பள்ளி மாணவர்களிடையே குறைகளை கேட்டிருந்தார்.



இதன் பின் உடுமலை கால்நடை மருத்துவமனைக்கு சென்றவர், அங்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் கல்லாபுரம் ஊராட்சி கொம்பே கவுண்டன் துறையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் கல்லாபுரம் ஊராட்சி போலவாடி புது நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகளையும் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வின்போது உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...