சிவன்மலையில் தேர்த்திருவிழாவின் 12ம்‌ நாள்‌ தெப்ப உற்சவ நிகழ்வு – திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிவன்மலையில், உற்சவருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. உற்சவர் தெப்பக் குளத்தில் நீராடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து சிவன்மலை செங்குந்த முதலியார் சமூகத்தினர் சார்பில் 12 ஆம் நாள் முறையை நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த ஜனவரி 17ஆம் தேதி புதன்கிழமை துவங்கியது. இதனை தொடர்ந்து ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை சிவன்மலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து 3 நாட்கள் தேரோட்டத்தை சிறப்பித்தனர்.

இதனை அடுத்து மூன்றாம் நாள் தேரோட்டம் முடிந்ததும், இரவு சுமார் 7 மணி அளவில் தேரிலிருந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சன்னதிக்கு எழுந்தருளினார். பின்னர் உற்சவருக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்று வடம் பிடித்த மற்றும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம்‌ வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று உற்சவருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. உற்சவர் தெப்பக் குளத்தில் நீராடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து சிவன்மலை செங்குந்த முதலியார் சமூகத்தினர் சார்பில் 12 ஆம் நாள் முறையை நடத்தினர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் 13ஆம் நாள்‌ நிகழ்வாக நாளை வியாழக்கிழமை மதியம் 12 மணி அளவில் மஹா தரிசனம் நடைபெற உள்ளது‌. பக்தர்கள் அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி அருள் பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...