பொள்ளாச்சி நகர மன்ற கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் மறுப்பு

தனி வார்டு திமுக உறுப்பினர்களான மாணிக்கராஜ், நாச்சிமுத்து ஆகியோர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டாம் என்றும், பட்டியலின சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசிய பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்காமல் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கக்கூடாது என்றும் கூட்டத்தில் வலியுறுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நகராட்சி ஆணையாளர் சுப்பையா முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னதாக தேசிய கீதம் பாடிய பின்னர், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க தொடங்கிய போது தனி வார்டு திமுக உறுப்பினர்களான மாணிக்கராஜ், நாச்சிமுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டாம் என்றும், பட்டியலின சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசிய பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்காமல் தீண்டாமை உறுதிமொழி எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

ஆனால் மரபு என கூறி தீண்டாமை உறுதிமொழி எடுக்கப்பட்டது. அப்போது திமுக உறுப்பினர்களான மாணிக்கராஜ், நாச்சிமுத்து ஆகியோர் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்வை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட நூலகத்தை தனியார் அமைப்பு பராமரிப்பதை கண்டித்து துணை தலைவர் வெளிநடப்பு செய்தார்.



அதனைத் தொடர்ந்து, குடிநீர், தெரு விளக்கு,அடிப்படைத் தேவைகள் மற்றும் மக்கள் திட்டங்கள் குறித்த 83 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டதாக கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

ஆனால் நகராட்சி பகுதியில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, திடக்கழிவு மேலாண்மை வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், தற்போது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வர்த்தகம், வியாபாரங்கள், தொழிற்சாலைகளுக்கான உரிமம் தொகை உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...