காங்கேயம் நகர்மன்ற கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காங்கேயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக மூன்று நிறுவனங்களிடம் இருந்து நிலவேம்பு குடிநீர் வழங்கிட விலைப்புள்ளி கோரப்பட்டதில் குறைவான விலைப் புள்ளியினை ஏற்று விநியோக உத்தரவு வழங்க அனுமதி கோரி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: காங்கேயம் நகராட்சி அலுவலகத்திலுள்ள நகர்மன்ற கூட்டத்தில் காங்கேயம் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ந.சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கமலவேணி, நகராட்சி ஆணையர் கனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கேயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக மூன்று நிறுவனங்களிடம் இருந்து நிலவேம்பு குடிநீர் வழங்கிட விலைப்புள்ளி கோரப்பட்டதில் குறைவான விலைப் புள்ளியினை ஏற்று விநியோக உத்தரவு வழங்க அனுமதி, நகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் குத்தகை உரிமத்தினை புது ஏல ஒப்பந்தப்பள்ளி கோரப்பட்டத்தில் வரப்பெற்ற ஒப்பந்த புள்ளிகளை ஒப்பிட்டு கூடுதலாக இருக்கும் ஒப்பந்த புள்ளியினை ஏற்று குத்தகைக்கு விட அனுமதி, குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள செடி, கொடி, முட்புதர்களில் களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிக்காக ஆகும் செலவு தொகையினை பொது நிதியிலிருந்து மேற்கொள்ள மன்றத்தின் அனுமதி, தூய்மை இந்தியா திட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கிடங்கில் குப்பைகளை அரைக்கும் இயந்திரம் பழுதடைந்த நிலையில் பழுது பார்க்கும் செலவிற்கு மன்றத்தின் அனுமதி, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் பணிக்கு ஆகும் செலவு தொகைக்கான மன்றத்தின் அனுமதி உட்பட சுமார் 47 கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் அனைத்தும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்கும் பணி குறித்தும், குடிநீர் குழாய்கள் உடைப்பு மற்றும் சரிசெய்வது குறித்தும், சிவன்மலை ஊராட்சி, பொத்தியம்பாளையம் ஊராட்சி மற்றும் ஆலம்பாடி ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து எல்லை விரிவாக்கம் செய்வது குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளும், வருவாய் அதிகரிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து காங்கேயம் நகராட்சியின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் காங்கேயம் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...