காங்கேயம் சென்னிமலை சாலையில் வீணாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் - நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

குடிநீர் வீணாகும் இடத்தை சுற்றி நோய் தொற்றுகளை ஏற்படுத்த கூடிய வகையில் மிகவும் சுகாதாரமற்ற அசுத்தமாக உள்ளது. பிளாஸ்டிக் பைகள், மது மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்கு பைகள், குப்பைகள் என முழுவதும் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீரும் மாசடைந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சென்னிமலை சாலையில் மின் மயானம் எதிரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கின்றது. இந்த குழாயின் ஏர்வால் அதே இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏர்வால்வில் கடந்த ஆறு மாதங்களாக பல லட்சம் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் வீணாக சென்று சாக்கடையில் கலக்கின்றது.

கடந்த 6 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அந்த குழாய்களின் வழியே செல்லும் பெரும்பாலான தெருக்களுக்கும், குடியிருப்புகளுக்கும் முறையாக குடிநீர் செல்லாமல் சாலைகளில், கழிவுநீர் கால்வாய்களிலும் வெள்ளம் போல் குடிநீர் வழிந்து ஓடுகிறது.

நகராட்சி நிர்வாகம் அதை சரி செய்யாமல் சாக்கு பைகளை வைத்து அடைத்து வைத்துள்ளனர். அடைத்து வைத்திருந்தாலும் மேலும் குடிநீர் பீச்சி அடித்து வெள்ளம் போல் சாக்கடையில் கலந்து வீணாக செல்கின்றது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு காங்கேயம் பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் இவ்வளவு குடி நீரானது தினசரி சாக்கடையில் கலந்து செல்வது வேதனை அளிக்கிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் பல ஆண்டுகளாக காங்கேயம் நகராட்சியில் குடிநீர் பராமரிப்பு பணியில் பணிபுரியும் ஊழியர்கள் பணியிடை மாறுதல் ஆகாததே இதற்கெல்லாம் காரணம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குடிநீர் வீணாகும் இடத்தை சுற்றி நோய் தொற்றுகளை ஏற்படுத்த கூடிய வகையில் மிகவும் சுகாதாரமற்ற அசுத்தமாக உள்ளது.

பிளாஸ்டிக் பைகள், மது மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்கு பைகள், அன்றாட வீட்டு உபயோக குப்பைகள் என முழுவதும் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீரையும் மாசுபடுத்தி வருகிறது. மேலும் இந்த குடிநீர் குழையை மூடிவைத்திருக்கும் சாக்கு பயையை சுற்றியிலும் வனப்பகுதி நீர் தேக்கத்தில் இருக்கும் அட்டை பூச்சிகள் உள்ளது.

மேலும் இந்த பகுதியில் தான் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. மேலும் இது போலவே 20க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீரானது வீணாக சாக்கடைகளிலும், சாலைகளிலும் செல்கின்றது. எனவே இது குறித்து நகராட்சியும் மற்றும் நகராட்சி குடிநீர் வடிகால் துறை ஊழியர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...