பட்டியலின மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து உடுமலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தற்பொழுது சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக, பள்ளி கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்ற வருகின்றது என முன்னாள் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பட்டியல் இன மாணவி மீது கொடூர தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, தமிழகத்தில் தற்பொழுது சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக, பள்ளி கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்ற வருகின்றது.

தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பட்டியலின மாணவி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தற்பொழுது திமுக அரசால் புறக்கணிப்பு செய்யப்பட்டு உள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பேசினார்.



கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருப்பூர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...