ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

எம்ஜிஆர் குறித்து இதுவரை யாரும் பேசாத அளவிற்கு ஆ.ராசா தரக்குறைவாக பேசியிருப்பதாகவும், அவரின் பேச்சை முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது கண்டிக்கிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.


திருப்பூர்: திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த விவகாரத்தில் உடனடியாக நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மாநகர மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் மாநகர மாவட்ட அதிமுகவின் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.



அப்போது, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், பட்டியலின பெண் திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமே திராவிட மாடல் ஆட்சிக்கு உதாரணம்.

இதில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக மட்டுமல்லாது திமுகவை வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர் எம்ஜிஆர். திமுகவில் உள்ளவர்களையும் முதலமைச்சர் ஆக்கியது எம்ஜிஆர். இதுவரை யாரும் பேசாத அளவிற்கு ஆ.ராசா தரக்குறைவாக பேசியிருப்பதாகவும், அவரின் பேச்சை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது கண்டிக்கிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

எம்ஜிஆர் குறித்து பேசியதற்காக ஆராசா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அதிமுக சார்பில் மிகப் பெரும் போராட்டம் நடைபெறும். அது திமுகவிற்கு ஒரு சவாலாக அமையும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...