பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, மண்டல அளவிலான மாபெரும் பேச்சுப் போட்டி, கலைத்திறன் போட்டி, கலைஞர் கொண்டாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கோவை: திமுக பொறியாளர் அணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, மண்டல அளவிலான மாபெரும் பேச்சுப் போட்டி, கலைத்திறன் போட்டி, கலைஞர் கொண்டாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணா முன்னிலை வகித்தார். இதில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.



இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் விதத்தில் நடனம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. பேச்சுப் போட்டியில் பேசிய சரண்யா என்ற மாணவி, கலைஞர் என்பவர் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று சொன்னால் அது மிகையாகாது. சிந்தனையாலும், நிர்வாகத் திறமைகளும், எளிய மனிதருக்கும் தன் கொண்ட மானுட பற்றால் கொண்ட கொள்கையால் திட்டங்கள் தீட்டி தமிழகத்தின் முகத்தை மாற்றி அமைத்தவர் ஒரே தலைவர் கலைஞர் என்றார் .

இதனை தொடர்ந்து பேசிய ரமேஷ் என்ற மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் கொண்டு வந்து பெண்கள் அனைவரையும் படிக்க வைத்து பெண் சமுதாயத்தை மேலோக்கியவர் கலைஞர் என்றார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...