தாராபுரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து "தமிழக வெற்றி கழகம்" என அரசியல் கட்சி" தொடங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


திருப்பூர்: நடிகர் விஜய் அரசியல் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வடதாரை ஜின்னா மைதானம், பூக்கடை கார்னர் வழியாக அண்ணா சிலை வரை இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து "தமிழக வெற்றி கழகம்" என அரசியல் கட்சி" தொடங்கப்பட்டதாக தற்போது அறிவிப்பு வெளியானது.



இந்நிலையில் தாராபுரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து அண்ணா சிலை முன்பு விஜய் மக்கள் இயக்க கொடியுடன் கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...