உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் மீண்டும் காத்திருப்பு போராட்டம்

அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிப்படி, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் மீண்டும் உப்பாறு அணையின் உட்பகுதியில் தற்காலிக பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடுவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் கூறியது போல் தண்ணீர் திறந்து விடாததால் மீண்டும் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை. இந்த அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், சங்க நிர்வாக உறுப்பினர் சிவகுமார் தலைமையில் கடந்த ஐந்து நாட்களாக பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் முன்னிலையில் பொதுப்பணித்துறை உடுமலை பொள்ளாச்சி கோட்ட செயல் பொறியாளர் மகேந்திரன், தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன், தாராபுரம் குண்டடம் (பொறுப்பு) காவல் நிலைய ஆய்வாளர் அருள், திருப்பூர் உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் உள்ளதாகவும், அதை வழங்குவதற்கு சட்ட முறைப்படி உத்தரவு பிறப்பித்து அதன் பிறகு வழங்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை உப்பாறு பாசன விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இதனால் போராட்டத்தை விவசாயிகள் தற்காலிக ஒத்திவைத்தனர். இந்த நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் மீண்டும் உப்பாறு அணையில் உட்பகுதியில் தற்காலிக பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அணைக்கு தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...