புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஜி.கே.என்.எம். மருத்துவமனை சிகிச்சை

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆர்பிட்டல் டிரிப்சி போன்ற உபகரணங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட இருதய சிகிச்சை இந்தியாவிலேயே இதுதான் முதலாவதாக இருக்கக்கூடம் என்று டாக்டர். பிவின் வில்சன் தெரிவித்தார்.


கோவை: ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.பிவின் வில்சன் அவர்களின் தலைமையிலான மருத்துவர்கள் குழு, இருதய தமனிகளில் ஏற்பட்டுள்ள கால்சியம் அடைப்புகளை திறப்பதற்கு ஆர்பிட்டல் அதெரக்டோமி மற்றும் இன்ட்ராவாஸ்குலர் (Orbital Atherectomy followed by Intravascular Lithotripsy (Orbital Tripsy( பயன்படுத்தி மிகவும் சிக்கலான இருதயத்தில் ஸ்டென்ட் பொருத்தும் செயல்முறையினை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

இது குறித்து டாக்டர். பிவின் வில்சன் அவர்கள் கூறியதாவது, பொதுவாக அதிகளவு கால்சியம் கொண்ட தமனிகள் உள்ள நோயாளிகளுக்கு ஸ்டெண்டிங் செய்வதற்கு முன்பு கால்சியம் அடைப்புகளை உடைப்பதன் மூலமாக ரத்த நாளங்களை தயார் செய்ய வேண்டும். இதற்காக கட்டிங் பலூன், ரொடாப்லேஷன் போன்ற யுக்திகள் பயன்படுத்துப்படுகின்றன.



ஆனால் தற்போது தீவிர கால்சியம் பாதிப்புள்ள தமனிகளின் அடைப்புகளை உடைத்து நீக்குவதற்கு ஆர்பிட்டல் அதெரக்டோமி மற்றும் இன்ட்ராவாஸ்குலர் லிதோடிரிப்சி ஆகிய இரண்டு நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் நம்மிடம் உள்ளன.

கடந்த வாரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 75 வயதுள்ள நோயாளி ஒருவர் ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இரத்த நாளங்கள் அதிகளவில் கால்சியத்தால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அத்தகைய கால்சியம் அடைப்புகளை ஊடுருவி ஒரு பலூன் கூட செல்ல இயலாத அளவிற்கு இருந்தது. இந்த நிலையில் கால்சியத்தை உடைத்து சரி செய்தால் அன்றி ஸ்டென்டிங் செய்வது என்பது இயலாத ஒன்று.

அப்படி முயற்சி செய்தால் அது நோயாளிக்கு மீண்டும் தீவிர மாரடைப்பினை ஏற்படுத்த கூடும். ஆகையால் நாங்கள் முதலில் கால்சியத்தை உடைக்க தீர்மானித்தோம். அது பெரிய இருதய தமனியாக இருந்த காரணத்தால் ஆர்பிட்டல் அதெரக்டோமி முறையில் 1.25 எம்.எம். உள்ளதும், 80000 முதல் 120000 ஆர்.பி.எம். வரையிலான வேகத்தில் சூழலக்கூடிய டைமண்ட் கிரவுன் ரொட்டேட்டர் பயன்படுத்தி கால்சியத்தை உடைத்தோம்.

இருப்பினும் மிக ஆழமாக படிந்துள்ள கால்சியத்தை முழுமையாக அகற்ற முடியவில்லை. எனவே இதற்கென இன்ட்ராவாஸ்குலர் லிதோடிரிப்சி (IVL) என்ற புதிய தொழில்நுட்பத்தை கொண்டு சரி செய்தோம். இந்த அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அதிர்வலைகள் ஒரு பலூன் வாயிலாக ரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகின்றன. அவை ஆழமாக படிந்துள்ள கால்சியம் படிமங்களை உடைக்கின்றன. இதன் பின்னர் வெற்றிகரமாக ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

அநேகமாக ஆர்பிட்டல் டிரிப்சி போன்ற உபகரணங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட இருதய சிகிச்சை இந்தியாவிலேயே இதுதான் முதலாவதாக இருக்கக்கூடம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...