வெள்ளலூர் குளக்கரையில் நடைபெற்ற உலக சதுப்பு நில நாள் நிகழ்வில் குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்பு

சதுப்பு நில நாளைமுன்னிட்டு, வெள்ளலூர் குளக்கரையில் ஈரநிலம், அது சார்ந்த பறவையினங்கள், பட்டாம்பூச்சிகள், பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.


கோவை: வருடந்தோறும் பிப்ரவரி 02-ஆம் தேதி உலகம் முழுவதும் சதுப்பு நில நாள் கடைபிடிக்கப்படுகிறது. நீர்நிலைகளை ஒட்டி மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு உயிரினங்கள் அதை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.



மனிதர்களால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஈர நிலங்கள் வெகுவேகமாக ஆக்கிரமிக்கப்பட்டும், மாசுபடுத்தப்பட்டும் வருகிறது. இன்றைய நாளில் வெள்ளலூர் குளக்கரையில் அங்கு ஆவணப்படுத்தப்பட்ட ஈரநிலம், அது சார்ந்த பறவையினங்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள், பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.



விழிப்புணர்வு நிகழ்வு துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்டு நடைபெற்றது.மேலும் பார்வையாளர்கள் நாம் குளக்கரையில் அமைத்துள்ள மியாவாக்கி குறுங்காடு மற்றும் பட்டாம்பூச்சி பூங்காவினை சுற்றிப் பார்த்து அதுபற்றி ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...