நொய்யலை ஆக்கிரமிக்கும் கழிவுப்பொருட்கள்- தூய்மை பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்

கோவை மாவட்டத்தில் அழியும் தருவாயில் உள்ள பல்வேறு நீர்நிலைகளை தன்னார்வலர்களும், மாநகராட்சியும் இணைந்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக கோவையில் சமீபகாலமாக பல்வேறு நீர்நிலைகள், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.



அதனொரு பகுதியாக கடந்த இருநாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் அருகே நொய்யல் கரையோரம் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் நொய்யல் ஆற்றின் வழித்தடத்தினை ஆக்கிரமித்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் புகைப்படமும் கோவை மாநகராட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



இதையறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரி லோகநாதன் மேற்பார்வையின் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்த பிளாஸ்டிக், துணிகள், கிழிந்த படுக்கைகள், பாட்டில்கள், பயன்படுத்தப்படாத வீட்டு நுகர்பொருட்கள் போன்ற கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நீர்நிலை மறுசீரமைப்பு தன்னார்வலர் குழுவினர் கூறுகையில், சில மக்களும், தன்னார்வலர்களும் இதுபோன்ற நீர்நிலைகளை காப்பாற்ற பணியாற்றி வருகின்றனர். நீர் நிலைகளை பாதுகாக்க பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...