பொள்ளாச்சியில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் கைது

பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் சபரிகிரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கடன் அதிகமாக இருந்ததால் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சபரிகிரி வாக்குமூலம் அளித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சென்ற இரண்டு பெண்களிடம் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.



அப்போது சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த சபரிகிரி(41) என்வர் நகை பறிப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து தற்போது தனிப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



இதையடுத்து தலைமை காவலர் சபரிகிரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சபரிகிரியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடன் அதிகமாக இருந்ததால் இதுபோன்ற நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சபரிகிரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருக்கிறதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...