நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியதை தொடர்ந்து திருப்பூரில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புதிய பேருந்து நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நடிகர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


திருப்பூர்: நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் தனது கட்சியின் பெயரை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி தமிழக வெற்றி கழகம் என புதிதாக துவங்கப்பட்டுள்ள கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து நீண்ட நாட்களாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து இருந்த அவரது ரசிகர்கள் தமிழக முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.



அதன்படி திருப்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புதிய பேருந்து நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



நிகழ்வில் வடக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் குத்புதின், மாவட்டச் செயலாளர் சின்னதுரை, மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன், மாவட் மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் சேக் சித்திக் சதக்கத்துல்லா, வாசிம் விக்கி, செல்வா, கார்த்திக், அஜித் குமார் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...