இனிமேல் முன்னாள் மாணவர்கள் என்று அழைக்க வேண்டாம் - அன்னூரில் நடைபெற்ற பள்ளி விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேச்சு

வகுப்பறைகள் சீரமைத்தல், அறிவியல் ஆய்வுக்கூடம், புதிய ஆய்வுக்கூட கட்டிடம், ஸ்மார்ட் வகுப்பறை, நூலக கட்டிடம் புதுப்பித்தல், 73 கண்காணிப்பு கேமரா அமைத்தல் என சுமார் ரூ.2 கோடியில் பணிகள் செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவை அன்னூரில் 73 ஆண்டுகள் பழமையான அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் முன்னணி மருத்துவமனையில் தலைவர்களாகவும், டெல்லியில் மத்திய அரசின் உயர் பதவிகளிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில் தற்போது உள்ள தலைமை ஆசிரியை சித்ரா முயற்சியில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரை ஒன்றிணைத்து பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பல பணிகளைக் கடந்த ஆண்டு துவக்கி மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வகுப்பறைகள் சீரமைத்தல், அறிவியல் ஆய்வுக்கூடம், புதிய ஆய்வுக்கூட கட்டிடம், ஸ்மார்ட் வகுப்பறை, நூலக கட்டிடம் புதுப்பித்தல், 73 கண்காணிப்பு கேமரா அமைத்தல், 20 வகுப்புகளுக்கு மின் விளக்கு மற்றும் மின்விசிறி அமைத்தல், மாணவர்களின் இருக்கைகளை புதுப்பித்தல், 35 வகுப்பறைகளுக்கு மேஜைகள் அளித்தல், தையல் பயிற்சி அளித்தல், கூடைப்பந்து மைதானம் சீரமைத்தல், கழிப்பறை அமைத்தல், கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்தல், இரவு காவலர் நியமித்தல் ஆகிய பணிகளை 2 கோடி ரூபாய் செலவில் செய்துள்ளனர்.



இந்த பணிகளை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விதமாக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிப்பன் வெட்டி பொருட்களை பள்ளிக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாணவர்களிடையே பேசிய இறையன்பு ஐஏஎஸ், இனி முன்னாள் மாணவர்களை அவ்வாறு அழைக்க வேண்டாம், அவர்களை என்றும் மாணவர்கள் என்று அழையுங்கள் என்று கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...