கோவை போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம்-டாடா நகர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பிப்ரவரி 5 மற்றும் 12 -ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் டாடா நகா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 08189) புதன்கிழமை இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கேரள மாநிலம், எா்ணாகுளம்-ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.2) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிப்ரவரி 5 மற்றும் 12 -ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் டாடா நகா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 08189) புதன்கிழமை இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.

மறு மார்க்கமாக பிப்ரவரி8, 15-ஆம் தேதிகளில் (வியாழக்கிழமை) எா்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில் (எண்: 08190) சனிக்கிழமை காலை 4.35 மணிக்கு டாடா நகரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், காவாலி, ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, பீமாவரம் டவுன், ராஜமுந்திரி, சாமல்கோட், பார்வதிபுரம், முனிகுடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...