கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணா படத்திற்கு திமுகவினர் மரியாதை

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் பல இடங்களில் அமைதி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை ஒட்டி அவரது திருஉருவ படத்திற்கு திமுகவினர் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் பல இடங்களில் அமைதி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணாவின் உருவ படத்திற்கு திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மலர் தூவி மரியாதை செய்தார்.

கூடலூர் நகர செயலாளர் மற்றும் கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு தலைமை தாங்கி கோசங்கள் போட்டு மலர் தூவினார். துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 4வது வார்டு செயலாலர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து அண்ணா புகழ் குறித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் துரை, செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், பொன் மாடசாமி, நிர்வாகிகள் வக்கீல் பிரபு, பால்சந்த், வார்டு செயலாளர்கள் கோபால், துரைசாமி, சாமிசெட்டிபாளையம் ரமேஷ், கேஸ்கம்பெனி சுரேஷ், நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் சுந்தரராஜன், ஜெயசந்திரன், காளியண்ணன், நகர்மன்ற கவுன்சிலர்கள் ரேவதி, மணிமேகலை, ரம்யா, சித்ரா, வனிதாமணி, பேங்க் முருகேசன், ராகுல், சாலைவேம்பு குணசேகரன், நகர துணை செயலாளர்கள் செல்வி, கிரேஷி, முன்னாள் துனைத்தலைவர் கோகிலாமணி, மகளீர் அணியை சேர்ந்த சுகந்தி, ஸ்ரீனியம்மாள், புஷ்பா, சித்ரா உட்பட ஏராளமனோர் கலந்துக்கொண்டு மரியாதை செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...