உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு

கதிரியக்க பட்டப்படிப்பு மாணவர்களின் விழிப்புணர்வு நாடகமும், மருத்துவர்கள், செவிலியர், செவிலிய பயிற்சிபள்ளி மாணவர்கள், மண்டல புற்றுநோய் மையத்தை சேர்ந்தவர்கள் அடங்கிய 250 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.


கோவை: ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 ம் தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் நாட்டில் புற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மாற்றங்களாலும் நம் வாழ்வியல் முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது.

புற்றுநோயை ஆரம்ப நிலையில கண்டறிந்தால் பாதிக்கப்பட்டவரை முழுமையாக குணப்படுத்தி விடலாம். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளான நீண்ட நாள் ஆறாத புண்கள், இருமல், சளியில் இரத்தம், மார்பகக் கட்டிகள், சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம், பெண்களுக்கு அசாதாரண இரத்தப் போக்கு, தவிர்க்க முடியாத எடை இழப்பு, சோர்வு போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

புற்றுநோய் கண்டறிய தேவையான பரிசோதனைகள், குணப்படுத்த தேவையான சிறப்பு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் சிறப்பு மருந்துகள் அனைத்தும் நம் மருத்துவமனையில் உள்ளது.



இவ்விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் பொருட்டு 03.02.2024 (சனிக்கிழமை) அன்று காலை மண்டலபுற்றுநோய் மையம், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பாக மருத்துவமனை வளாகத்தில் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் நிர்மலா அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும் இவ்விழாவில் புற்றுநோய் மருத்துவத் துறைத்தலைவர் டாக்டர் பிரபாகர், புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் பாலமுருகன், டாக்டர் செல்வராஜ் மற்றும் மண்டல புற்றுநோய் மையத்தை சார்ந்தவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.



அதில் கதிரியக்க பட்டப்படிப்பு மாணவர்களின் விழிப்புணர்வு நாடகமும், மருத்துவர்கள், செவிலியர், செவிலிய பயிற்சிபள்ளி மாணவர்கள், மண்டல புற்றுநோய் மையத்தை சேர்ந்தவர்கள் அடங்கிய 250 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...