தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து 2024-ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு

இந்த ஆண்டுக்கான 10 வகையான பயிர்கள், 10 தோட்டக்கலைப் பயிர்கள் என 20 வகையான பயிர் வகைகளை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி விவசாயிகள் முன்னிலையில் வெளியிட்டார்.


கோவை: கோவை வடவள்ளி சாலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் புதிய பயிர்கள் அறிமுகம் செய்து வருகின்றனர்.



அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான 10 வகையான பயிர்கள், 10 தோட்டக்கலைப் பயிர்கள் என 20 வகையான பயிர் வகைகளை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி விவசாயிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியான பெரும்பாலான ரகங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வேளாண் பயிர்களில் நெல்லில் இருவழி வீரிய ஒட்டு இரகம் மற்றும் பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன 2 இரகங்களும், தானிய பயிர்களில் இனிப்புச் சோளம் உட்பட 4 புதிய இரகங்களும், பயறு வகைப்பயிர் பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் தக்கைப்பூண்டு போன்ற பயிர்களில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டனர்.

தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மூன்று பழப்பயிர்கள் பன்னீர் திராட்சை, 5 காய்கறிப்பயிர்கள் கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக் கீரை, சிவப்புக்கீரை மற்றும் பல்லாண்டு முருங்கை வகைகள், சிவப்பு புளி மற்றும் தென்னையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டனர். விவசாயிகள் புதிய ரகங்களை சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...