உடுமலையில் கட்டி முடிக்கப் பட்ட நடை மேம்பாலத்தை திறக்க மக்கள் வலியுறுத்தல்

பஸ் நிலையத்திற்கு தென் பகுதியில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மைய தடுப்புகள் வைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் கூடிய இரும்பு மேம்பாலமும் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலம் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பஸ்களும் உடுமலை பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றது. இதனால் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள பொள்ளாச்சி- உடுமலை, பழனி-உடுமலை சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அத்துடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து பஸ் நிலையத்திற்கு தென் பகுதியில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மைய தடுப்புகள் வைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் கூடிய இரும்பு மேம்பாலமும் கட்டப்பட்டது.

ஆனால் அந்த பாலம் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது. சாலையின் மையப் பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். மேம்பாலமும் அதில் உள்ள லிப்ட்டும் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து வருகிறது.

இதனால் அந்த பாலம் கட்டப்பட்ட நோக்கமும், அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகி வருகிறது. பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகின்ற நகராட்சி நிர்வாகம் உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்ட மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...