கோவையில் வரலாறு காணாத பூண்டு விலை உயர்வு - ஒரு கிலோ ரூ.540 விற்பனை

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டுக்கு தினசரி 100 டன்னுக்கு மேல் பூண்டு வந்தது. அது தற்போது 40 டன் ஆக குறைந்துவிட்டது. இதன் காரணமாக பூண்டு விலை மளவளவென உயர்ந்தது.


கோவை: வரத்து குறைவு எதிரொலியாக கோவையில் ஒரு கிலோ பூண்டு ரூபாய் 540க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத்தில் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு அதிக அளவில் பூண்டு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பூண்டு விலை குறைவாக இருந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூபாய் 274 வரை விற்பனையானது.

இந்த நிலையில் பூண்டு வரத்து மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டுக்கு 100 டன்னுக்கு மேல் பூண்டு வந்தது. அது தற்போது 40 டன் ஆக குறைந்துவிட்டது. இதன் காரணமாக பூண்டு விலை மளவளவென உயர்ந்தது.



மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூபாய் 450 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் நேற்று கிலோ 375 வரை விற்பனையானது. இதனால் மளிகை கடையில் சில்லறை விற்பனையாக கிலோவுக்கு 540க்கு விற்பனையானது.



பூண்டு விலை திடீரென்று உயர்ந்துள்ளதால் இல்ல தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து வியாபாரி கூறும் போது, கோவைக்கு நீலகிரி மற்றும் வடமாநிலங்களில் இருந்து பூண்டு கொண்டு வரப்படுகிறது. அதன் வரத்து கடந்த ஒரு வாரமாக மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கூறப்படுகிறது. முப்பது கிலோ கொண்ட மூட்டையாக வரும் பூண்டை சிறுவியாபாரிகள் வாங்கிச் சென்று பிரித்து காய வைக்கும் போது மூட்டைக்கு 4 கிலோ வரை கழிவு சென்றுவிடும்.

இதனால் அவர்கள் கடையில் விற்கும் போது திரு 540க்கு விற்பனை செய்யப்படுகிறார்கள். கோவை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகளில் 100 கிராம் பூண்டு ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது. புதுப்பூண்டு இன்னும் வரவில்லை. இது வந்தால் தான் விலை குறைய வாய்ப்பு உள்ளது .என்று அவர்கள் கூறினார். பூண்டு விலை உயர்வால் கடைகளில் பாக்கெட் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் விற்பனை அதிகரித்து உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...