கௌசிகா நீர்கரங்கள் சார்பில் குன்னத்தூர் குளம் சீரமைக்கும் பணிகள் துவக்கம்

கோவையை சேர்ந்த பிரபல தொழில் நிறுவனமான ப்ரொபெல் இண்டஸ்ட்ரீஸ் குன்னத்தூர் குளத்தை சீரமைக்க சுமார் மூன்று இலட்சம் ரூபாய் நிதி பங்களிப்பு வழங்கியுள்ளது. கோவை ராக் பொதுநல அமைப்புடன் இணைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அமைப்பினர் நேற்று (பிப்.4) காலை பூஜையுடன் பணிகளை துவங்கினர்.


கோவை: கோவை அன்னூர் தாலுக்காவுக்கு உட்பட்ட குன்னத்தூர் பகுதியில் உள்ள சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட குன்னத்தூர் குளம் வருவாய்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இந்த குளம் தற்பொழுது புதர்மண்டி குப்பைக்கழிவுகள் மிகுந்து காணப்படும் இந்த குளத்தை சீரமைக்க கௌசிகா நீர்கரங்கள் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து குன்னத்தூர் குளம் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கி தொடர்ந்து வாரந்தோறும் களப்பணிகள் மேற்கொண்டு சுத்தம் செய்து வந்த நிலையில், சமீபத்திய பருவமழைக்கு நீர்வழிப்பாதைகள் மூலம் குட்டையின் ஒருபகுதி நீர் நிறைந்தது.

இந்நிலையில் தற்போது கோவையை சேர்ந்த பிரபல தொழில் நிறுவனமான ப்ரொபெல் இண்டஸ்ட்ரீஸ் இந்த குளத்தை சீரமைக்க சுமார் மூன்று இலட்சம் ரூபாய் நிதி பங்களிப்பு வழங்கியுள்ளனர். கோவை ராக் பொதுநல அமைப்புடன் இணைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அமைப்பு நேற்று (பிப்.4) காலை பூஜையுடன் பணிகள் துவக்கப்பட்டது. ப்ரொபெல் நிறுவனத்தின் சார்பில் விக்னேஷ், குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கௌசிகா நீர்க்கரங்கள் அமைப்பு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல்,கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று (4.2.2024) குறிச்சி குளம் பகுதியில் களப்பணியில் ஈடுபட்டனர். அதன்படி குறிச்சி குளம் உபரிநீர் வாய்க்காலின் இரு புறங்களிலும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நட்ட 1500 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் அவர்கள் குறிப்பாக கவாத்து செய்தல், கலைச் செடிகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...