நாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் யுவபாரதி பள்ளி அணி வெற்றி

YELLOW TRAIN பள்ளி மற்றும் YUVA BHARATHI பள்ளி அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் 7-6 என்ற கோல் கணக்கில் யுவபாரதி பள்ளி வெற்றி கோப்பையை வென்றது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற 7A SIDE கால்பந்து போட்டியில் 7-6 என்ற கோல் கணக்கில் யுவபாரதி பள்ளி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே 7A SIDE கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கோவையைச் சேர்ந்த 14 பள்ளிகளைச் சேர்ந்த கால்பந்து அணியினர் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு கலந்து கொண்டு பேசும்போது, அனைவரும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.



தொடர்ந்து மாணவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கால்பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைத்தார். யுவா பப்ளிக் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் பள்ளியின் அறங்காவலர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவில் பள்ளி அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில், 14 அணிகள் கலந்து கொண்ட நிலையில் சரவணம்பட்டி VIVEKAM CBSE பள்ளி, அரசூர் YELLOW TRAIN பள்ளி, நாயக்கன்பாளையம் YUVA PUBLIC பள்ளி, வடவள்ளி YUVA BHARATHI பள்ளி ஆகிய பள்ளி அணிகள் அரையிறுதி சுற்றிற்கு தகுதி பெற்றனர்.

இதில் VIVEKAM CBSE பள்ளி மற்றும் YELLOW TRAIN பள்ளி அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 5-4 என்ற கோல்கணக்கில் YELLOW TRAIN பள்ளி அணி வெற்றிபெற்றது. YUVA PUBLIC பள்ளி மற்றும் YUVA BHARATHI பள்ளி அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் YUVA BHARATHI பள்ளி அணி வெற்றி பெற்றது. YELLOW TRAIN பள்ளி மற்றும் YUVA BHARATHI பள்ளி அணிகளுக்கிடையே நடைபெற்ற இறுதிச்சுற்றில் 7-6 என்ற கோல் கணக்கில் யுவபாரதி பள்ளி வெற்றி கோப்பையை வென்றது.



இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் அறிவரசு இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த YUVA BHARATHI பள்ளி அணி, இரண்டாம் இடத்தைப் பிடித்த YELLOW TRAIN பள்ளி அணி, மூன்றாம் இடம் பிடித்த VIVEKAM CBSE பள்ளி அணி மற்றும் 4ம் இடம் பிடித்த YUVA PUBLIC பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் வெற்றிக் கோப்பையை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...