வேடப்பட்டி ஊராட்சி அரசுப்பள்ளியில் தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் - திமுகவினர் அத்துமீறல்

அரசுப் பள்ளியில் தமிழக முதல்வரின் காப்பீடு திட்டம் விழாவில் திமுகவின் அத்துமீறல் செயல்களுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். அரசு விழாக்கள் பள்ளியில் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டி ஊராட்சியில் தொடக்கப்பள்ளியில் 58 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் முகாம் அரசு பள்ளியில் நடைபெற்ற காரணத்தால் மாணவர்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்க வைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.



அரசு விழாக்கள் அரசுப்பள்ளியில் நடத்தக்கூடாது என்று விதிகள் இருப்பினும் அரசுப் பள்ளி முன் திமுகவினர் கட்சி கொடிகளை நட்டு அத்துமீறல்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் ஜெயலட்சுமியை தொலைபேசியில் பேச முயன்றபோது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.

மடத்துக்குளம் வட்டார கல்வி அதிகாரி சரவணன் அவர்களிடம் இது குறித்துகேட்ட போது, மாவட்ட கல்வி அதிகாரியிடம் திமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் முறையாக விண்ணப்பம் செய்து அரசு பள்ளியில் காப்பீட்டு முகாம் நடத்துவதற்கான அனுமதி வழங்க வேண்டும் என கடிதம் கொடுத்த நிலையில் தற்பொழுது பள்ளியில் காப்பீடு முகாம் நடைபெற்று வருகின்றது.

குறைந்த அளவு மாணவர்கள் இருப்பதால் அருகில் உள்ள கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளியில் நடைபெற்று வரும் காப்பீடு திட்டத்தால் குழந்தைகள் கல்வி பயில்வதில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.

இதற்கிடையில் அரசுப் பள்ளியில் தமிழக முதல்வரின் காப்பீடு திட்டம் விழாவில் திமுகவின் அத்துமீறல் செயல்களுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும் அரசு விழாக்கள் பள்ளியில் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் அருகே உள்ள வேடப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு தமிழக கல்வித்துறை சார்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது.



மடத்துக்குளம் அருகே அரசு பள்ளியில் அரசு விழாவில் திமுக கொடிகள் கட்டி திமுகவினர் அத்து மீறலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...