சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு உடுமலையில் கார்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம்

பேரணி தளிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ரவுண்டனா வழியாக ராஜேந்திராசாலை, கபூர் கான்வீதி, ரயில்வே மேம்பாலம், தளிரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று எலையமுத்தூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை போக்குவரத்துதுறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு காரில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குட்டை திடலில் தொடங்கிய இந்த பேரணியை உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். இதையடுத்து பேரணி தளிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ரவுண்டனா வழியாக ராஜேந்திராசாலை,கபூர் கான்வீதி, ரயில்வே மேம்பாலம், தளிரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று எலையமுத்தூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.



ஊர்வலத்தின் போது காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சாலை போக்குவரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன்,போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி, ஓட்டுனர் பயிற்சி மையத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...