கோவை சுங்கம் பகுதியில் அதிநவீன சிசிடிவி கேமரா காவல் அறை திறப்பு

அதிநவீன சிசிடிவி கேமரா காவல் அறையில், குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி மற்றும் மைக், நான்கு அதிநவீன சிசிடிவி கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளது.


கோவை: கோவை சுங்கம் பகுதியில் புதிய காவல் அறை ஒன்றை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (பிப்.6) திறந்து வைத்தார். அதில் குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி மற்றும் மைக், நான்கு அதிநவீன சிசிடிவி கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த காவல் அறையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்களில், அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தானியங்கி செயல்பாட்டின் மூலம் ஒவ்வொரு வாகன எண்ணும் பதிவேற்றம் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.



அதேபோன்று சாலையைக் கடப்பவர்கள் எளிதாக கடந்து செல்வதற்கான சிறப்பு சிக்னலையும் கோவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

இந்த சிக்னலை பொதுமக்களை உபயோகப்படுத்தி சாலையை எளிதாக கடக்கலாம் எனவும் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. கோவை மாநகர காவல் துறையின் இந்த நடவடிக்கை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...