கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

கடத்தூர் பிரிவு அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென பழுதாகி நின்றதால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் கடத்தூர் பிரிவு அருகே இன்று (பிப்.6) லாரி திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.



இதன்காரணமாக, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த அன்னூர் போலீசார் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் போக்குவரத்தை சீரமைத்தனர். இதன்பிறகே, அப்பகுதியில் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...