துடியலூர் அருகே நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் நோட்டாவிற்கு ஓட்டு போடுவதாக தீர்மானம்

மாநாட்டில் வள்ளி கும்மி, படுகர் நடனம், ஒயிலாட்டம், ஆதிவாசி மக்களின் இசை, பழங்குடியின மக்களின் பாடல், பஜனை போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை துடியலூர் அருகே கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 100வது பிறந்த நாள் விழா, பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. இதற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார்.

தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி, மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் ஐ.போஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் சங்கத் தலைவர் முன்னாள் டி.எஸ்.பி வெள்ளியங்கிரி கொடி அசைத்து பேரணியை துவங்கி வைத்தார்.



இந்தப் பேரணியானது துடியலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி விஸ்வநாதபுரம், ஆஞ்சநேயர் கோயில் மற்றும் வி.ஜி மருத்துவமனை வழியாக மாநாடு பந்தலை வந்து அடைந்தது.



பல்வேறு விவசாயி சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த மாநாட்டில் வள்ளி கும்மி, படுகர் நடனம், ஒயிலாட்டம், ஆதிவாசி மக்களின் இசை, பழங்குடியின மக்களின் பாடல், பஜனை போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



தொடர்ந்து விவசாய நிலங்களில் யானை, காட்டுப்பன்றி, மயில், மான், குரங்கு, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றும், விவசாயத்தை காப்போம் என்றும், வனவிலங்கு பிரச்சனையை உடனடியாக மத்திய மாநில அரசுகள் சரி செய்ய வேண்டும், இல்லை என்றால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்த விவசாயிகள் சங்க சார்பாக விவசாயிகள் அனைவரும் நோட்டா சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் இன்று முதல் நோட்டா கூட்டணி தமிழகத்தில் உருவாகியுள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதில் கலந்துகொண்டு அனைத்து விவசாயிகளும் பச்சை துண்டு அணிந்து வந்தனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இறுதியில் கோவை மாவட்ட தலைவர் மனோகரன் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...