உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் விழா - வையம்பாளையத்தில் பாஜக சார்பில் மரியாதை

பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நாராயணசாமி நாயுடுவின் உருவ சிலை மற்றும் நினைவிடத்தில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை எஸ்.எஸ் குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுமணிமண்டபத்தில் அவருடைய 99வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.6) கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்ராஜ், மாநில விவசாய அணி துணைத் தலைவர்பாண்டியன், மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் செந்தூர் முருகேஷ், வெள்ளிங்கிரி, மாவட்ட செயலாளர் புல்லட் சதீஷ், பாஜக ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்ராஜ் என்கின்ற சண்முகசுந்தரம், அமைப்புசாரா பிரிவு செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயசேகர்,மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நாராயணசாமி நாயுடு அவர்களின் உருவ சிலை மற்றும் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...