உப்பாறு அணை அலுவலகம் வளாகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - போலீசார் குவிப்பு

உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கடந்த 16-நாட்களாக உப்பாறு அணை விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீர் திறக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என தெரிவித்து உப்பாறு பாசன விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் வருகின்ற 6-ம் தேதி செவ்வாய்க்கிழமைக்குள் தண்ணீர் திறக்கவில்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்து இருந்த நிலையில்.



இன்று 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...