எலையமுத்தூர் ஊராட்சியில் புத்தர் கோவில் கட்ட இடையூறு- கோவில் கட்டுமான நிர்வாகிகள் புகார்

புத்தர் கோவில் கட்டுமான பணி முறைப்படியாக கிரையம் பெற்ற பூமியில் தான் நடைபெற்று வருகிறது. கோவிலின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத ஒரு சிலர் தவறான தகவல்களுடன் மனு அளித்துள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சிலர் அந்த கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் அவர்களிடம் மனு அளித்ததாக தெரிகிறது.

இதனால் கட்டுமானபணிகள் தடை படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து புத்தர் கோவில் கட்டுமான நிர்வாகிகள் கூறியதாவது, புத்தர் கோவில் கட்டுமான பணி முறைப்படியாக கிரையம் பெற்ற பூமியில் தான் நடைபெற்று வருகிறது. கோவிலின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத ஒரு சிலர் தவறான தகவல்களுடன் மனு அளித்து கட்டுமான பணிக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

எங்கள் தரப்பு ஆவணங்களை அதிகாரிகளிடம் அளித்து உள்ளோம் என்றனர். ஆவணங்களை பரிசீலித்து கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...