மாற்று திறனாளிகளின் பராமரிப்பாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்வு

I Support Need என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்வில் உதவித்தொகை கோரி பரமரிப்பாளர்கள் மாற்றுதிறனாளி பயனாளிகளுடன் கலந்துகொண்டனர். இவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழக அரசின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கபட்டு வரும் நிலையில் தங்களால் சுயமாக கவனித்து கொள்ள முடியாமல் வேறு ஒருவர் பராமரிப்பில் உள்ள மாற்று திறனாளிகளை கவனித்து கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது.



I Support Need என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கபடுகிறது. இந்த உதவித்தொகை பெற தகுதியானவர்களுக்கான தேர்வு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்று வருவதை முன்னிட்டு உதவித்தொகை கோரி பரமரிப்பாளர்கள் மாற்றுதிறனாளி பயனாளிகளுடன் வந்திருந்தனர்.



இவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...