சரவணம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ள விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ரூ.780 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை (பில்லூர் - III) துவக்கி வைக்க, வரும் 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.


கோவை: கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், பவானி ஆற்றினை நீராதாரமாக கொண்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.780 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை (பில்லூர் - III) துவக்கி வைக்க, வரும் 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.



இந்த நிலையில் இத்திட்டத் துவக்க விழா நடைபெறும் கோவை, சரவணம்பட்டி, குமரகுரு பொறியியல் கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் விழா பந்தல் அமைக்கும் பணிகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர், சு.முத்துசாமி தலைமையில் இன்று (பிப்.7) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழகச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், வடக்கு மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...