குனியமுத்தூரில் ரூ.179.50 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

சிறுவாணி டேங் சாலை, குனியமுத்தூர் சாலை வரை மூலதன மானிய நிதி(CGF) திட்டத்தின்கீழ் ரூ.169 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுமானப்பணி நடைபெற்றுவருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைவாகவும், தரமாகவும் செய்துமுடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை குனியமுத்தூர், வார்டு எண் 87-க்குட்பட்ட (சின்னசுடுகாடு சந்திப்பு முதல் எஸ்.என்.ஆர் கார்டன் முதல் வீதி வரை மற்றும் குறிஞ்சி நகர் முதல் புட்டுவிக்கி வாய்க்கால் வரை) பகுதியில் ரூ.179.50 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இன்று (பிப்.7) நடைபெற்றது.



இதை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார் தொடங்கி வைத்தார். உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், 87 வார்டு கவுன்சிலர் உதயநிதி பாபு மற்றும் பகுதி கழக செயலாளர் லோகநாதன், வட்ட கழக செயலாளர் யாகூப் செட் மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



மழைநீர் வடிகால் கட்டுமானப்பணியை ஆய்வு செய்த மேயர் கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.88க்குட்பட்ட சிறுவாணி டேங் சாலை, குனியமுத்தூர் சாலை வரை மூலதன மானிய நிதி(CGF) திட்டத்தின்கீழ் ரூ.169 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுமானப்பணி நடைபெற்றுவருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (பிப்.7) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைவாகவும், தரமாகவும் செய்துமுடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மண்டல தலைவர் ர.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், பாபு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.94-க்குட்பட்ட மாச்சம்பாளையம் பகுதியில் (NSMT) நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (பிப்.7) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.82-க்குட்பட்ட ஒக்கிலியர் காலனியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (பிப்.7) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் தூய்மைப்பணிகள் குறித்து குறைகளைக் கேட்டறிந்தார்.



உடன் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி.பி.முபசீரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட பி.கே.புதூர் பாலு கார்டன் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் கால்பந்து விளையாட்டு அரங்கம் கட்டுமானப்பணி நடைபெற்றுவருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.88க்குட்பட்ட ஜே.ஜே.நகர் பிரதான சாலையில் மூலதன மானிய நிதி(CGF) திட்டத்தின்கீழ் ரூ.329 இலட்சம் மதிப்பீட்டில் 1600 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டுமானப்பணி நடைபெற்றுவருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைவாகவும், தரமாகவும் செய்துமுடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட பி.கே.புதூர், பாலு கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...