கோவை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து குறைவு – ஒரு கிலோ ரூ.1200 விற்பனை

மல்லிகை பூ ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கும், ஜாதி மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை கிலோ 600 ரூபாய்க்குக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் மல்லி விலை குறைய வாய்ப்புள்ளது என்று மலர் வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பூ மார்க்கெட்டுக்கு ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பனிக்காலத்தில் மல்லி, ஜாதிமல்லி மற்றும் முல்லை பூக்கள் மலர்ச்சி குறைந்து விலை அதிகரிப்பு வழக்கம். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக விலை அதிகரித்து மல்லி கிலோ 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது பனி குறைந்து வெயில் அதிகரித்துள்ளது.

ஆனாலும், இரவு நேரங்களில் பனிப்பொழிவு குறையவில்லை. அதனால் மல்லிகை உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது. நேற்று மல்லிகை ஒரு கிலோ 1200 ரூபாய்க்கும், ஜாதி மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கு, முல்லை கிலோ 600, ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மலர் வியபாரிகள் கூறுகையில், மல்லி, ஜாதி, முல்லை இந்த மூன்றும் வெயில் காலத்தில் தான் அதிகம் வளர்ச்சி இருக்கும் பனிக்காலத்தில் மலர்ச்சி அதிகம் இருக்காது வழக்கமாக ஜனவரி பிப்ரவரியில் பணி குறைந்து உற்பத்தி அதிகரிக்கும்.

ஆனால், இந்த முறை பணி குறையவில்லை. இரவு நேரத்தில் பணி அதிகமாக உள்ளது. அதனால் மல்லி வரத்து குறைந்து குறைந்தது விலை அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் மல்லி விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...