தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று பொள்ளாச்சி திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தனித்திறமை, சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பொள்ளாச்சியில் இருந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி மேதினி, மூன்றாம் வகுப்பு மாணவன் ஆதோவ் ஆகிய இருவர் தங்கப் பதக்கமும், மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தின் வெள்ளி பதக்கமும் வென்றனர்.


கோவை: ஹரியானா மாநிலத்தில் கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் 300 பேர் பங்கேற்றனர். இதில் தனித்திறமை, சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பொள்ளாச்சியில் இருந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி மேதினி, மூன்றாம் வகுப்பு மாணவன் ஆதோவ் ஆகிய இருவர் தங்கப் பதக்கமும், மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தின் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

பதக்கம் பெற்று இன்று பொள்ளாச்சி வந்த மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்களும், உறவினர்களும் மாலை மற்றும் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்காப்பு கலையான சிலம்பத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுனர் என்றும், கேலோ விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பதால் அதிலும் பங்கேற்று, மாணவர்கள் பதக்கங்கள் வெல்வதற்கு லட்சியத்தோடு இருப்பதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...