கோவையில் பிப்ரவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் கோயம்புத்தூா் சங்கமம், நம்ம ஊரு திருவிழா - ஆட்சியர் அறிவிப்பு

பிப்ரவரி 10 ஆம் தேதி சின்னவேடம்பட்டி ஸ்ரீஅலமேலு மங்கம்மாள், நஞ்சப்பன் குழுவினரின் நையாண்டி மேளம், நீலகிரி மலை அரசி அம்சமல்லி குழுவினரின் தோடா் நடனம், சங்கரம் நாட்டியப் பள்ளி சஸ்மிதா அரோரா குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (பிப்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் வஉசி மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைக்கவுள்ளார்.

செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்புரையாற்ற உள்ளார். விழாவில், ஆட்சியா், மேயா் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனா்.

இதில், பிப்ரவரி 10 ஆம் தேதி சின்னவேடம்பட்டி ஸ்ரீஅலமேலு மங்கம்மாள், நஞ்சப்பன் குழுவினரின் நையாண்டி மேளம், நீலகிரி மலை அரசி அம்சமல்லி குழுவினரின் தோடா் நடனம், சங்கரம் நாட்டியப் பள்ளி சஸ்மிதா அரோரா குழுவினரின் பரதநாட்டியம், மேட்டுப்பாளையம் சேரன், சாமிநாதன் குழுவினரின் துடும்பாட்டம், ருத்ராஞ்சநேயா ருத்ரமூா்த்தி குழுவினரின் சிலம்பாட்டம், ஈரோடு முகில் கலை தேவி குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கதிரவன் கலைக் குழுவினரின் பொக்கிஷம் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பிப்ரவரி 11-ஆம் தேதி நவரச நாட்டியாலயா விஜயலட்சுமி குழுவினரின் பரதநாட்டியம், மேட்டுப்பாளையம் கலைவாணி கிராமியக் கலைக் குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, செல்வி தாரணி குழுவினரின் சிலம்பாட்டம், வாகராயம்பாளையம் கோபால் குழுவினரின் நாட்டுப்புறக் கோலாட்டம், பொள்ளாச்சி கண்ணாடி வெண்புறா விஜயகுமார் குழுவினரின் ஜிக்காட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளன. விழாவில், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...