கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் பணம் திருட முயன்ற நபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனியசாமி (39) என்பவர் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் பணம் திருட முயன்றது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், வேறு எதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மரகதம் (36). இவர் உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் “நியூராலஜி” வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.7) இவரது படுக்கையில் தலையணைக்கு அடியில் வைத்திருந்த பர்சை ஒரு நபர் நைசாக திருடினார்.

இதைப் பார்த்த மரகதம் சத்தம் போட்டார். பின் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அவரை விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனியசாமி (39) என்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் வேறு எதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...