சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் அனைவருக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. பி.எஸ். இளங்கலை அறிவியல் பட்ட படிப்பு சார்ந்து "அனைவருக்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் திட்டத்தின்" கீழ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance) மூன்று அமர்வுகளாக நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், மத்திய மண்டலம் சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு 1751 மாணவ/மாணவிகள் மற்றும் 12ம் வகுப்பு பயிலும் விருப்பம் தெரிவித்த மாணவ, மாணவியர்களுக்கும், சென்னை ஐ.ஐ.டி. பி.எஸ். இளங்கலை அறிவியல் பட்ட படிப்பு சார்ந்து "அனைவருக்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் திட்டத்தின்" கீழ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance) மூன்று அமர்வுகளாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சென்னை IIT மெட்ராஸ் திட்ட தலைவர் (வழிகாட்டி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்) என்.ஹரிகிருஷ்ணன் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சிறப்புரையாற்றினார். இத்திட்டத்தின் நன்மைகளைப் பற்றி கீழ்காண் தலைப்புகளில் மாணவ/மாணவியர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.



TOPICS IN DATA SCIENCE

*Date Structures and Algorithms

*Machine Learning

*Deep Learning

*Artificial Intelligence

*Big Data

*Financial Forensics

*Data Visualization

*Large Language Model (Ilm)

*Computer Vision

TOPICS IN ELECTRONIC SYSTEMS

*Electronic Systems Thinking and Circuits

*Electrical and Electronic Circuits

*Basic Digital Systems

*Signals and Systems

*Digital Signal Processing

*Embedded Linux

*Sensors and Applications

*Electronic Product Design

*Control Engineering



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...