ஓய்வு பெற்ற காவலர்கள் பயிற்சி முகாம் மூலம் உயர் அதிகாரிகளாக தேர்வு பெற்ற காவலர்களுக்கு கோவை காவல் ஆணையர் வாழ்த்து

பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர்களாகவும், அதேபோல காவல் நிலைய தீயணைப்பு துறை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களை நேரில் வரவழைத்து கோவை மாநக காவல் ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை அவிநாசி சாலை மற்றும் பாலசுந்தரம் சாலை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மூலம் அரசுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

அதில் கோவை ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றும் பல்வேறு காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர்களாகவும், அதேபோல காவல் நிலைய தீயணைப்பு துறை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.7) நேரில் வரவைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். பின்னர் இவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...