பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சர்கார்பதி வனப்பகுதியில் வெட்டி கொண்டு வரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் மரத்தை பாலாற்றில் வைத்து பூஜை செய்து பக்தர்கள் படை சூட ஊர்வலாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலின் ராஜ கோபுரம் முன்பு மேலதாளங்கள் முழங்க, பக்தர்களின் பரவச கோஷத்துடன் மூங்கில் மரம் கொடி ஏற்றி வைத்து குண்டம் திருவிழா தொடங்கியது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.



இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா வருகிற 25ம்தேதி நடைபெற இருகிறது. குண்டம் திருவிழாக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. சர்கார்பதி வனப்பகுதியில் வெட்டி கொண்டு வரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் மரத்தை பாலாற்றில் வைத்து பூஜை செய்து பக்தர் படை சூட ஊர்வலாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலின் ராஜ கோபுரம் முன்பு மேலதாளங்கள் முழங்க, பக்தர்களின் பரவச கோஷத்துடன் மூங்கில் மரம் கொடி ஏற்றி வைத்து குண்டம் திருவிழா தொடங்கியது.

இந்த நிகழ்வில் கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானபூஜை 23ம் தேதி நள்ளிரவிலும், 25ம் தேதி காலை குண்டம் இறக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...