நேதாஜி நகரில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா- கோவை மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு

கோவை மாநகரில் குற்ற நடவடிக்கை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் குற்றமில்லா நகரமாக மாற்றுவதற்கும் 80 சதவீதம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தெரிவித்தார்.


கோவை: நேதாஜி நகர் விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் கோவை மாநகர காவல் டி1 காவல் நிலையம் சார்பில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நிகழ்வு நேற்று (பிப்.8) நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணகுமார் கலந்து கொண்டு 32 கண்காணிப்பு கேமராவினை திறந்து வைத்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாநகரில் குற்ற நடவடிக்கை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் குற்றமில்லா நகரமாக மாற்றுவதற்கும் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் உத்தரவின் பேரில் 80 சதவீதம் சிசிடிவி கேமராக்கள் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.



அதனை பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்காக கொண்டு சென்று அவர்களுக்கு உதவியாக காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் முயற்சியில் இப்பணிகள் நடைபெற்று உள்ளது. மேலும் இம்முயற்சியானது குற்றங்களை தடுப்பதற்கு முழு உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து நேதாஜி நகர் பகுதியில் மரக்கன்றுகளை துணை ஆணையர் சரவணகுமார் நட்டு வைத்தார். இந்நிகழ்வில் காவல்துறை போத்தனூர் சரக உதவி ஆணையர் கரிகால் பாரி சங்கர் மற்றும் நேதாஜி நகர் விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் ஜாபர், ராமச்சந்திரன், சிதம்பரம், ஜெயச்சந்திரன், ஜெயக்குமார், சுதாகர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...