உடுமலை கச்சேரி வீதியில் போக்குவரத்து போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பொதுத்துறை வங்கிக்கு வந்த பெண் ஒருவர் நிறுத்திய இருசக்கர வாகனத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் உட்பட அங்கு வந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் கச்சேரி வீதியும் ஒன்றாகும். இதில் தாசில்தார் அலுவலகம், கிளைச் சிறை, சார்நிலை கருவூலம், சார் பதிவாளர் அலுவலகம், நீதிமன்றங்கள், பொதுத்துறை வங்கி உட்பட தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அது தவிர அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு இந்த வழியே பிரதானமாகும். இதனால் நாள்தோறும் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகிறது. மேலும் பல்வேறு சேவைகளுக்காக வருகின்ற வாகன ஓட்டிகள் சாலையின் இரு புறங்களையும் ஆக்கிரமித்து ஆங்காங்கே நிறுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது.

இதனால் கச்சேரி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கச்சேரி வீதியின் ஒரு பகுதியில் வாகனங்களை நிறுத்துவதென இடம் ஒதுக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில் இன்று பொதுத்துறை வங்கிக்கு வந்த பெண் ஒருவர் நிறுத்திய இருசக்கர வாகனத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் உள்ளிட்ட அங்கு வந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், வாகனங்களை நிறுத்தக் கூடாது என்ற அறிவிப்பு பலை வைக்கவில்லை. மேலும் அபராதம் விதிப்பதிலும் பாரபட்சம் காட்டுகின்றனர். அருகில் உள்ள உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வாகனங்களை தாறுமாறாக சாலையில் நிறுத்தம் செய்திருந்த நிலையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கவில்லை. மாறாக இதனால் ஏழை எளிய மக்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள் என தெரிவித்தனர்.

உடுமலை பிரதான சாலையில் காவல் உதவி ஆய்வாளர் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...