கொரோனா காலத்தில் பணியாற்றி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி – பொள்ளாச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

எலி காய்ச்சல் தொடர்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் அதிகாரிகளை அனுப்பி உசிலம்பட்டி கிராமத்தில் எங்கிருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது சுகாதார சேவைகள் எப்படி இருக்கிறது என்ற ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 3 கோடியே 17 லட்சம் செலவில் கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை இணைப்பு சாய்தளக் கட்டிடம், ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் போன்ற கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இதை போல் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழாவை தொடங்கி வைத்து குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு பதிவு செய்த பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட அரசு மருத்துவமனையில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், மதுரை உசிலம்பட்டியில் எலி காய்ச்சல் தொடர்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் அதிகாரிகளை அனுப்பி உசிலம்பட்டி கிராமத்தில் எங்கிருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது சுகாதார சேவைகள் எப்படி இருக்கிறது உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைத்து ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதாகவும், அந்த பகுதியில் நீர் மாசுபாடு உள்ளதா என்பதை ஆய்வகங்கள் மூலம் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி உள்ளதாகவும், தற்போது எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும் துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணியாற்றி நீக்கப்பட்ட 977 பேருக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விழாக்களில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...