கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த மேயர் கல்பனா ஆனந்தகுமார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் மற்றும் நாகராஜபுரம் பகுதியில் உள்ள மண் சாலையை ரூ.24.60 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், ரூ.18.10 இலட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், ரூ.16.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்கம்பங்களுடன் கூடிய தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் கோண்டி நகர் பகுதியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொதுகழிப்பிடம் கட்டும் பணி, ரூ.8.68 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (பிப்.9) பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சபரிராஜ் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...