பக்கோதிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆண்டு விழாவில் அரசு தொடக்க பள்ளியில் பயின்று வரும் 40 பள்ளி குழந்தைகளும் பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடங்கள் அணிந்து பேச்சு போட்டிகளிலும், கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள பக்கோதிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பள்ளி குழந்தைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 37,576 அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறமை, கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் பேச்சு திறன் போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 10.ம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா மாணவர்களின் பேச்சுத் திறன் மற்றும் கலை நிகழ்ச்சிகளோடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியை அடுத்துள்ள பக்கோதிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.



இதில் அப்பள்ளியில் பயின்று வரும் 40 பள்ளி குழந்தைகளும் பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடங்கள் அணிந்து பேச்சு போட்டிகளும் மற்றும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



இந்த ஆண்டு விழாவில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தைகளின் திறமைகளை கண்டு மகிழ்ச்சியில் உற்சாகப்படுத்தினர்.



மேலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகளுக்கும், இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்ததோடு அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பரிசுகளும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...