கோவையில் இரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவம், செயற்கை நுண்ணறிவு கேமிரா மூலம் கண்காணிக்கும் பணி தொடக்கம்

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப கேமிரா மற்றும் தெர்மல் கேமிரா பொருத்தும் பணியினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகூ ஆகியோர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை முதல் கேரள மாநிலம் வாளையார் வரை சுமார் 21 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதி வழியாக இரண்டு இரயில் தடங்கள் உள்ளது. கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய வழித்தடம் ஏ லைன் என்றும் கேரளாவில் இருந்து கோவைக்கு வரக்கூடிய வழித்தடம் பி லைன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரண்டு இரயில் தடங்களில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான இரயில்கள் வந்து செல்கிறன. இந்த இரயில் பாதையை யானைகள் இரவு நேரங்களில் கடக்கும் போது இரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதுவரை இந்த பகுதியில் இரயில் மோதி 11 யானைகள் உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் யானைகள் இரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இரயில் பாதையில் சுரங்கப்பாதை அமைத்தல் இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணி செல்லுதல் என பல்வேறு பணிகள் நடைபெற்று இருந்தாலும், இரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க முடியவில்லை.



இதனைத் தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பம் கொண்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொறுத்தி யானைகளை கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக தமிழக வனத்துறை சுமார் 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 12 இடங்களில் உயர் கோபுரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப கேமரா மற்றும் தெர்மல் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.



இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அதனை இன்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகூ ஆகியோர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.



தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார்.



மேலும் வனத்துறையினருக்கு டார்ச் லைட், முதலுதவி பெட்டிகளையும் வழங்கினார்.



தொடர்ந்து விழாவில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மதிவேந்தன் வாளையார், ஆனைகட்டி, சோளக்கரை, இருட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகள் யானைகள் விரும்பும் ஓய்வு இடம்.

யானைகளின் வழித்தடத்தில் தாக்கம் ஏற்பட்டதன் காரணமாக மனித மிருக மோதல் நடைபெறுகிறது. யானைகள் வழைத்தடத்தில் ஏற்படும் மாற்றத்தாக அதன் உணவு முறையில் மாற்றம் ஏற்படுகிறது. கோவை வனக்கோட்டத்தில் 3 ஆண்டுகளில் 928 முறை வனத்தை விட்டு யானைகள் வெளியேறியுள்ளது.

இரயில் விபத்தில் யானைகள் உயிரிழப்பது கவலைக்குறியது சொளக்கரை பகுதியில் இரண்டு ரயில் பாதைகள் உள்ளன. இதன் நடுவில் உள்ள ஆற்றுக்கு யானைகள் வருகிறது. அவ்வாறு வரும்போது விபத்து ஏற்பட்டதில் 11 யனைகள் இரயில் மோதி உயிரிழந்துள்ளது. சுரங்க பாதை ஏற்படுத்தினாலும் தீர்வு இல்லை.

யானைகளின் நடமாட்டத்தை 24 மணி நேரம் கண்காணிக்க நவீன செய்ற்கை நுண்ணறிவு காமிர நிறுவ 7 கோடியே 24 லட்சம் செலவு செய்யப்பட்டு காமிராக்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் காரணமாக 7 கி.மி தூரம் கண்காணிக்க முடியும். 2023ல் துவங்கி தற்போது பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. யானைகள் கடக்கும் இடங்களில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இரயில் பாதை அருகே யானைகள் வரும்போது இந்த காமிரா கண்காணிப்பு மையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கிறது. விலங்குகள் நடமாட்டம் கண்காணித்து இரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் விபத்தை தடுப்பது தனிப்பட்ட யானைகளின் நடத்தையை கண்டறியலாம். யானைகளை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்திட்டம் யாரும் அறிமுகம் படுத்தாத திட்டம். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளையும் காக்கும் அரசு தற்போதைய அரசு எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...