பொள்ளாச்சியில் திமுக சார்பில் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து உடுக்கை அடித்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

இனி ஒரு முறை மோடி பிரதமராகும் பட்சத்தில் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வார் என்றும் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து உடுக்கை அடித்து நபர் ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது கட்சிகள் புதுவிதமான தேர்தல் பிரச்சாரத்தை கையில் எடுப்பது வழக்கம்.

அதேபோல விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது.



திமுகவைச் சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து கையில் உடுக்கையோடு பொள்ளாச்சி நகர் பகுதி வீதிகளில் பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார்.



பிரச்சாரத்தின் போது திமுக அரசு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளதாகவும், கேஸ் விலையை உயர்த்தியது தான் மோடி செய்த ஒரே சாதனை என்றும், இனி ஒரு முறை அவர் பிரதமராகும் பட்சத்தில் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வார் என்றும் பிரச்சாரத்தின் போது அவர் பேசினார். இவருடன் பொள்ளாச்சி நகராட்சியின் 32வது வார்டு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...